இலங்கை பொலிஸை நவீனமயமாக்கல் தொடர்பில் வெளியாகியுள்ள விடயங்கள். - Sri Lanka Muslim

இலங்கை பொலிஸை நவீனமயமாக்கல் தொடர்பில் வெளியாகியுள்ள விடயங்கள்.

Contributors

நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை பொலிஸை

நவீனமயமாக்கல் தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்…


இலங்கை பொலிஸை நவீனமயமாக்கல்இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமாவதுடன், நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் ஆற்றிவருகின்றது.தற்போது பின்பற்றப்படுகின்ற சம்பிரதாய முறைகளை மாற்றியமைத்து, இலங்கைப் பொலிசை நவீனமயப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது.அதன் கீழ் நவீன பொறிமுறைகளுக்கமைய மோட்டர் வாகனங்களை வழிநடாத்தும் செயன்முறையின் பயனுள்ள வகையில் வினைத்திறனாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக, நகர்ப்புறங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக டிஜிட்டல் முறையான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோட்டார் வாகன மற்றும் வீதிப் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் நடவடிக்கைகளின் வினைத்திறன் தொடர்பாக முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது.அதற்கமைய, குறித்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இலங்கை பொலிசின் முழுமையான நவீனமயமாக்கல், வழிநடாத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் கருத்திட்டத்தை திட்டமிடுவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team