இலங்கை மண்ணில் இரத்தக்கறை படிய இடளிக்கக் கூடாது – ஜனாதிபதி - Sri Lanka Muslim

இலங்கை மண்ணில் இரத்தக்கறை படிய இடளிக்கக் கூடாது – ஜனாதிபதி

Contributors

 

qout4

பிறந்த மண்ணை வெற்றியின் மண்ணாக கருதி செயற்படவேண்டும் என எதிர்கால சந்ததியினரிடம் கேட்டுக்கொள்ளவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை ​தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து :-

“நாட்டில்  மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து எமது நாட்டில் இருந்து சிலர் மேற்கத்தேய நாடுகளுக்கு எழுதி அனுப்புகின்றனர்.ஆடு நணைகின்றது ஓநாய் அழுகிறததுப் போன்றுதான் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு சென்றுள்ளவர்களும் அழுகின்றனர்.

பிள்ளைகளை போன்று ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களும் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் பிறந்த மண்தான் உங்களது வெற்றி மண். இதில் இரத்தக் கரைபடவோ அழிவடையவோ இடமளிக்க வேண்டாம்.இதனையே நான்  எதிர்கால சந்ததியினரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.”(nf)

Web Design by Srilanka Muslims Web Team