இலங்கை மனித உரிமை தொடர்பில் பிரித்தானியா கவலை - Sri Lanka Muslim

இலங்கை மனித உரிமை தொடர்பில் பிரித்தானியா கவலை

Contributors

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியா மீண்டும் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார செயலக ராஜாங்க அமைச்சர் ஹியூகோ சுவயர் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை, பதில் கூறும் பொறுப்பு தொடர்பில் அந்நாட்டு அரசு முன்னேற்றத்தைக் காண வேண்டியுள்ளமை குறித்தும் அவர் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இலங்கையின் மனித உரிமை குறித்த நிலைமைகள் தொடர்பாக கிடைத்த தகவல்களையும் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும்இலங்கையில் செயல்படும் அரச சார்பற்ற அமைப்புகள் சிலவற்றின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்தபோது அவர் தெரிவித்த கருத்துகளையே சமூக இணையத்தளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team