இலங்கை முழுதும் ஆபத்தான கொரோனா வைரஸ்? இறுதி அறிக்கை நாளை..! - Sri Lanka Muslim

இலங்கை முழுதும் ஆபத்தான கொரோனா வைரஸ்? இறுதி அறிக்கை நாளை..!

Contributors

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவுவது தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை நாளை (10) காலை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படும் என டாக்டர் சந்திம ஜீவந்தர, தெரிவித்தார்.

மேலும், இன்று (9) ஆய்வுகள் ஓரளவு முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆபத்தான கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்பு குறித்து சில வாரங்களுக்கு முன்பு ஆய்வுகளை நடத்த டாக்டர் சந்திம ஜீவந்தர நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 96 மாதிரிகள் இந்த சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் கடுமையான கொரோனா வைரஸின் ஐந்து விகாரங்களும் இலங்கையில்  பரவியிருப்பதை மருத்துவ ஆராய்ச்சி குழு அண்மையில் கண்டுபிடித்தது.

கொரோனா வைரஸ் கண்காணிப்பு மேலும் தொடரும் டாக்டர் சந்திம ஜீவந்தர மேலும் கூறினார்

Web Design by Srilanka Muslims Web Team