இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் - SLTJ - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் – SLTJ

Contributors

ரஸ்மின் MISc-ஊடகச் செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்:
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற கடும் யுத்தம் காரணமாக இலங்கை வாழ் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டி கடந்த காலங்களில் “கற்றறிந்தபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு” என்றொரு குழுவை அரசு அமைத்தது.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய அக்குழுவின் அங்கத்தவராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற நீதியரசர் பரனகம அவர்களின் தலைமையில் யுத்தத்தினால் காணாமல் போனவர்களைகண்டறிவதற்கான ஒரு ஆணைக் குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.
1987 முதல் 2009 ம் ஆண்டு வரைக்கும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக இவ்வாணைக் குழு விசாரனைகளைநடத்தியுள்ளது. குறித்த இக்காலப் பகுதியில் சுமார் பதினோராயிரத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் காணாமல்போயுள்ளதாக இக்குழு கண்டறிந்துள்ளது.
யுத்தத்தின் காரணமாக சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் காணாமல்போயுள்ளார்கள். ஆனால் காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரை சிங்களவர்களும், தமிழர்களும் மாத்திரமேஇக்குழுவுக்கு முறைப்பாடுகளை செய்துள்ளார்கள். முஸ்லிம்கள் தரப்பில் திருப்தியளிக்கும் வகையில் முறைப்பாடுகள்செய்யப்படவில்லை என குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் பரனகம தெரிவித்துள்ளார்.
யுத்தம் காலத்தில் நாடு முழுவதும் கணிசமான முஸ்லிம்கள் காணாமல் போயுள்ளார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாகயாரும் முறைப்பாடுகளை செய்யவில்லை.
காணாமல் போனவர்களை பதிவு செய்யும் கால எல்லை முடிந்துள்ள போதும், தொடர்ந்தும் முறைப்பாடுகளைஏற்றுக்கொள்வதாக ஆணைக் குழு அறிவித்துள்ளது.
சிங்களவர்களும், தமிழர்களும் இவ்விடயத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டு பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள்.முஸ்லிம்கள் மாத்திரம் இவ்விடயத்தில் அக்கறை காட்டாமல் இருப்பது மிகவும் கவலைக்குறியதாகும்.
பதிவு செய்வதினால் என்ன பலன்?
யுத்தத்தினால் காணாமல் போனவர்களை ஆணைக் குழுவில் பதிவு செய்வதினால், ஆணைக்குழு காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கு முயற்சிக்கும். அதற்கும் மேலதிகமாக அவர்களை நம்பி வாழ்ந்தோருக்கு நஷ்டஈடுகளை வழங்குவதற்கு சிபாரிசுகளை மேற்கொள்ளும்.
முஸ்லிம்களில் காணாமல் போனவர்களின் விபரங்களை திரட்டி ஆணைக்குழுவுக்கு ஒப்படைப்பதற்கு அனைத்துத்தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காணாமல் போன பலர் கொல்லப்பட்டிருக்கலாம். அவர்களை நம்பி வாழ்ந்தவர்கள் நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ளஉரிமை உடையவர்கள். இவ்வாறான ஓர் அங்கீகாரம் பெற்ற ஆணைக்குழு உறுதி செய்தால் மாத்திரம் தான் குறித்தநஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள முடியும். இந்த விடயத்தில்முஸ்லிம்கள் அசமந்தமாக இருந்துவிடக் கூடாது என்பதைதெரிவித்துக் கொள்கின்றோம்.
பதிவு செய்வது எப்படி?
காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை தெரிவிப்பதற்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.குறித்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 30 ம் திகதிக்கு முன்பு The Chairman, The Commission For Missing Person, 9/8, Suranimala Place, Colombo – 06 என்ற இடத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் காரியாளயத்தில்ஒப்படைக்க வேண்டும்.
குறித்த இடத்தில் குறித்த திகதிக்குள் ஒப்படைப்பதற்கான வசதியில்லாதவர்கள் இம்மாதம் 28 ம் திகதிக்கு முன்பு SLTJ, Sri Saddharma MW, Maligawattha, Colombo – 10 என்ற முகவரிக்கு விபரங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு: 0771081996 / 0774781480 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

Web Design by Srilanka Muslims Web Team