இலங்கை முஸ்லிம்கள் ஏனைய மதத்தினரை பொறுமையாக - மதித்து நடங்கள் -உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்கள் ஏனைய மதத்தினரை பொறுமையாக – மதித்து நடங்கள் -உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர்

muslim

Contributors

இலங்­கையில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உலக முஸ்லிம் லீக் இந்­நாட்டின் ஜனா­தி­ப­திக்கோ அர­சுக்கோ அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­காது.

ஆனால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­காக எமது ஆலோ­ச­னை­களை வழங்க முடியும் என அவ்­வ­மைப்பின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்­லாபின் அல்­முஹ்ஸின் அல்­துர்க்கி தெரி­வித்தார்.

இதே­வேளை, இலங்கை முஸ்­லிம்கள் ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் முரண்­பட்டுக் கொள்­ளாது சமா­தா­ன­மாக சக­வாழ்­வோடு வாழ­வேண்டும். இது எமது கட­மை­யாகும்.

ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்­டு­மென்­பதே இஸ்­லா­மிய கோட்­பா­டாகும் என  இலங்கை வந்­துள்ள உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் மேலும் தெரி­வித்தார்.

கொழும்பு மாளிகாவத்தையி­லுள்ள இஸ்­லா­மிய நிலை­யத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் பதி­ல­ளிக்­கையில், இலங்­கையின் பல்­லின சமூ­கங்­க­ளுக்­கி­டையில் எது­வித முரண்­பா­டு­களும் உரு­வா­கக்­கூ­டாது என்­பதே உல­க­முஸ்லிம் லீக்கின் எதிர்­பார்ப்­பாகும். உலக முஸ்லிம் லீக் இலங்­கையின் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கி­றது.

கேள்வி: இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்குப் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. சவால்கள் உள்­ளன. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உலக முஸ்லிம் லீக் இலங்கை ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­குமா?

பதில் : உலக முஸ்லிம் லீக்­கினால் இந்­நாட்டின் ஜனா­தி­ப­திக்கோ அர­சுக்கோ அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க முடி­யாது. அழுத்­தங்கள் பிர­யோ­கிக்க எமக்கு அதி­கா­ர­மில்லை.

ஆனால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­காக எமது ஆலோ­ச­னை­களை வழங்க முடியும். நாம் எமது ஆலோ­ச­னை­களை வழங்­குவோம்.

கேள்வி: நடை­பெ­ற­வுள்ள உலக முஸ்லிம் லீக்கின் மாநாட்டில் இலங்கை தொடர்பில் என்ன திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளீர்கள்?

பதில்: நாம் அமுல்­ப­டுத்த வேண்­டிய திட்­டங்கள் தொடர்பில் இரு நாடு­களும் சேர்ந்து தீர்­மானம் எடுப்போம்.இரு­நா­டு­களும் சேர்ந்து குழு­வொன்­றினை நிய­மித்து அக்­குழு என்ன திட்­டங்­களை மேற்­கொள்­வது என்­பது பற்றி தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும். உலக முஸ்லிம் லீக் தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்கும்.

கேள்வி: இலங்­கைக்கு வழங்­கப்­படும் ஹஜ் கோட்­டாவை அதி­க­ரித்துப் பெற்றுக் கொள்­வ­தற்கு உலக முஸ்லிம் லீக் உத­வி­பு­ரி­யுமா?

பதில்: ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென சவூதி அரே­பி­யாவில் தனி­யான ஓர் அமைச்சு இருக்­கி­றது. இந்த அமைச்சின் பொறுப்­பிலே அனைத்துக் கட­மை­களும் இயங்­கு­கின்­றன.

அதனால் இவ்­வி­வ­கா­ரத்தில் எம்மால் தலை­யிட முடி­யாது. எம்மால் சிபார்­சு­களை மாத்­திரம் செய்­யலாம். ஹஜ் அமைச்சே தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும்.

கேள்வி: இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யாக காதி நீதி­மன்­றங்கள் இயங்­கி­வ­ரு­கின்­றன. காதி நீதி­ப­தி­க­ளுக்கு ஷரீஆ தொடர்­பான பயிற்­சி­களை சவூ­தியில் ஏற்­பாடு செய்ய முடி­யுமா?

பதில்: அதற்­கான கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும். சவூதி தூத­ரகம் ஊடாக அல்­லது இலங்­கை­யி­லுள்ள இஸ்­லா­மிய நிலை­யத்தின் ஊடாக இந்தக் கோரிக்­கை­களை முன்­வைக்­கலாம்.

அதற்­கான ஏற்­பா­டு­களை எங்­களால் முன்­னெ­டுக்க முடியும்.

கேள்வி : இலங்­கையில் வக்பு சட்டம் அமு­லி­லுள்­ளது. வக்பு சட்டம் தொடர்பில் உங்கள் கருத்­தென்ன?

பதில் : வக்பு சட்டம் ஓர் முக்­கிய சட்­ட­மாகும். வக்பு சட்­டத்தை இலங்கை முஸ்­லிம்கள் மத்­தி­ர­மல்ல, அனைத்து முஸ்­லிம்­களும் கட்­டா­ய­மாகப் பின்­பற்­றி­யாக வேண்டும்.

கேள்வி : வடக்கு, கிழக்கு யுத்­தத்தில் முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். பல பெண்கள் வித­வை­க­ளா­கி­யுள்­ளார்கள். வித­வை­க­ளுக்கும் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் கல்­விக்கும் உலக முஸ்லிம் லீக் உதவி செய்­யுமா?

பதில்: இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு முஸ்லிம் லீக் மாத்­தி­ர­மல்ல, பல நிறு­வ­னங்கள் உதவி செய்­து­வ­ரு­கின்­றன. மதீனா பல்­க­லைக்­க­ழ­கத்தில் அதி­க­மான இலங்கை மாண­வர்கள் பயில்­கி­றார்கள். சவூ­தியில் 500 க்கும் மேற்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்கி வரு­கின்­றன.

இஸ்­லா­மிய பீடம் மhத்­தி­ர­மல்ல மருத்­துவம், விஞ்­ஞானம், சமூ­க­வியல்,பொறி­யியல் போன்ற பல பீடங்கள் இயங்கி வரு­கின்­றன. ஆனால் இலங்கை முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய பீடத்தை மாத்­தி­ரமே நாடு­கின்­றனர்.

ஆனால் முஸ்­லிம்­க­ளுக்கு ஷரீஆ அறிவு அவ­சி­ய­மாகும். ஷரீ­ஆ­வினை அடுத்தே அனைத்து கற்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

அத­னா­லேயே சவூ­தியில் இஸ்­லா­மிய கற்­கைக்கு ஷரீஆ பீடத்­துக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. குர்­ஆனும் சுன்­னா­வுமே மக்­களை நல்­வழி நடத்­து­கி­றது.

கேள்வி: சவூ­தி­யிலும் பள்­ளி­வா­சல்­களில் குண்­டுகள் வெடிக்­கின்­ற­னவே? ஏன் அங்கு புரிந்­து­ணர்வு வளர்க்­கப்­ப­ட­வில்­லையா?

பதில்: சவூ­தியில் இவ்­வா­றான சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த நாம் மேற்­கொண்ட முயற்­சிகள் அனைத்­திலும் வெற்றி கண்­டுள்ளோம். சவூ­தியில் 100 சத­வீத பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஏனைய அரபு நாடுகள் எம்­மிடம் பாது­காப்பு தொடர்­பான பயிற்­சி­களைப் பெற்று வரு­கின்­றன. பாது­காப்பு சவூ­தியில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கேள்வி: இலங்­கைக்கும், சவூதி அரேபியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு உலக முஸ்லிம் லீக் பங்களிப்புச் செய்கிறதா?

பதில்: இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுப்பாலமாக உள்ளது. உலக முஸ்லிம் லீக் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் இவ் உறவு மேலும் வலுவடைந்துள்ளது. மற்றும் தூதரகங்கள் ஊடாகவும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் உறவுகள் பலப்பட்டுள்ளன.

கேள்வி: இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன கூறப்போகிறீர்கள்?

பதில்: இலங்கை முஸ்லிம்களாகிய நீங்கள் இரக்க சிந்தனையுள்ளவர்களாக இருங்கள். ஏனைய மதத்தவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் என்றார். (விடிவெள்ளி)

Web Design by The Design Lanka