இலங்கை முஸ்லீம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய நூல் வெளியீடு - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லீம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய நூல் வெளியீடு

Contributors

-அஷ்ரப் ஏ சமத்

 

Women Claiming Rights and Spaces – Muslim Personal Law in Sri Lank – book Launching ceremony

 

இலங்கை முஸ்லீம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய நூல்  முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.

 

இந் நிகழ்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் தலைவருமான ஜெசீமா இஸ்மாயில் தலைமையில்  கொழும்பு லக்ஷமன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.

 

பிரதம அதிதியா நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டார். இந் நூலின் முதற்பிரதி அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்  சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பர்சான ஹணிபா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் சரியா சர்சரன்குயில் மற்றும்  பயிசுன் சக்கரியா ஆகியோறும் உரையாற்றினார்கள்.

 

உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுக் தலைமையில் திருத்தி எழுதியுள்ள முஸ்லீம் விவாக விவகரத்துச் சட்டம் பற்றி விரிவாகப் பேசினார்.

 

இச்சட்டத் சீர்திருத்தத்தை அடுத்த வருடம் ஏப்ரலில் நீதிஅமைச்சரிடம் கையளிப்பதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் காதீ நீதிபதி நியமனங்கள் வழங்கும் போது   சட்டத்தரணிகளையே நியமித்தல் வேண்டும்.  நீதிஅமைச்சினால் சட்டத்தரணிகளை அரச உத்தியோகத்தர்களாக உள்வாங்கி  நியமிக்க வேண்டும். அதற்காக கவுண்சிலின், நீதிக்குழு அவர்களுக்கான தகமை மற்றும் தபாரிப்பு நிதி வங்கியில் இட்டு அதன் பற்றுச் சீட்டை மட்டும் காதிநிதிபதியிடம் சமர்ப்பித்தல், எவ்வாறு வழக்குகளை விசாரணை செய்தல் போன்ற பல்வேறு முஸ்லீம் விவகார சட்டங்கள் பற்றி தெளிவாக விளக்கினார்.

 

அத்துடன் தற்பொழுது நாட்டில்  உள்ள காதீ நீதிபதிகளை தொகையை குறைத்தல் வேண்டும். மற்றும் தபாரிப்புச் சட்டம் பணம் அறவிடுதல், முஸ்லீம் விவாகம் பெண்னுக்கு 16வயது ஆண்னுக்கு 18 வயதாக இருத்தல் வேண்டும்.

 

 

தான் ஜம்மியத்துல் உலமா சபையுடன் கலந்தாலோசித்து இந்த சட்ட திருத்ததைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை ஒரு உப கமிட்டி இணைந்து தயார் செய்கின்றது. பெண்கள் காதி நிதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் ஜெசீமா இஸ்மாயிலின் முஸ்லீம் பெண்கள் ஆராச்சி நிலையம் நாட்டின் பல்வேறுவகைப்பட்ட விவகரத்துப் பெற்ற பெண்கள் ஆண்கள் அவர்களது குழந்தைகள் பற்றி நாட்டின் பல்வேறு  பகுதிகளுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து அவர்களுக்கு கவுண்சிலின் போன்ற விடயங்களை நூலுருவில் வெளியீட்டு  சமர்ப்பித்துள்ளது.

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

Web Design by Srilanka Muslims Web Team