இலவச நாடக,மக்கள் அரங்கு பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல் - Sri Lanka Muslim

இலவச நாடக,மக்கள் அரங்கு பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்

Contributors
author image

எம்.ரீ.எம்.பாரிஸ்

முரண்பாடுகளுக்குரிய தீர்வாகவன் முறையைக் கையாளும் கலாசாரத்தை இல்லாதொழித்து உரையாடல் மூலம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல்,இனங்களுக்கிடையிலான வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புதல்,மற்றும் சகவாழ்வை மேலோங்கச் செய்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டநாடக/மக்கள் அரங்குபயிற்சி நெறியானது கடந்த வருடம் மிகவெற்றிகரமாக கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டது. தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு,ஆகிய அமைச்சுக்களின் முழு ஒத்துழைப்புடன் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இதனை அமுல்படுத்தியது.
 
இதன் இரண்டாவது கட்டம் திருகோணமலை,பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. மேடைமற்றும் நாடகப் பிரதியாக்கம்,நடிப்பு,சமூகஉரையாடல்களை ஒழுங்கு செய்தல் மற்றும் சகவாழ்வை மேலோங்கச் செய்தல் தொடர்பான கருத்தாக்கங்களை கலைத்துவமாக வெளிப்படுத்தல் ஆகியவற்றில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகள் இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்கலாம்.அடுத்துவரும்; நான்குவாரங்களில் ஆரம்பமாகவுள்ள இப்பயிற்சிநெறி முற்றிலும் இலவசமானது. தமிழ்,சிங்களம்,மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த36 இளைஞர் யுவதிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தகுதிவாய்ந்த,35வயதக்குக் குறைந்த இளைஞர் யுவதிகளுக்குதெரிவின் போது முன்னுரிமைவழங்கப்டும்.
 
சகவாழ்வையும் புரிந்துணர்வையும் ஊக்குவிக்கும் 20 நாடகங்கள் பிரதியாக்கம் செய்யப்படும். அந் நாடகங்கள் திருகோணமலை,பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில்; தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நடித்துக் காட்டப்படும்.தெரிவு செய்யப்படும் கிராமங்களில் நடமாடும் கலையகங்களும் ஆற்றுகை தளங்களும் இதற்கென உருவாக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நாடகங்கள் இடம்பெறும் போது அதன உள்ளடக்கம் மற்றும் நாடகத்தில் இடம்பெறும் வாழ்வியல் அனுபவம் என்பன தொடர்பாக உரையாடும் சந்தர்ப்பமும் மக்களுக்கு வழங்கப்படும்.

 

தெரிவு செய்யப்படும் 36 இளைஞர் யுவதிகள் கிராமங்கள் தோறும் சென்று நடிக்கும் போது அவரகளுக்குரிய தங்குமிடம்,போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவற்றுக்கான செலவினங்களை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ஏற்றுக்கொள்ளும்.
திருகோணமலை,பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகியமாவட்டங்களில் வாழும் தகுதிவாய்ந்த இளைஞர் யுவதிகள் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குமுன்னர் கிடைக்கக் கூடியதாக தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

 

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்போர்-

 

application@Ldjf.orgஎன்றமுகவரியைபயன்படுத்தலாம்.
தபால் மூலம் விண்ணப்பிப்போர் செயற்றிட்ட அதிகாரி,நாடகச் செயற்றிட்டம், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம், இலக்கம் 429, 2/1,நாவலவீதி, இராஜகிரய என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம். மேலதிகவிபரங்களுக்கு- 0776653694 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

07

 

08

 

Web Design by Srilanka Muslims Web Team