இல்ஹாம் மற்றும் இன்சாபின் தந்தை இப்ராஹிம் ஒரு ஜே.வி.பி உறுப்பினர்..!! - Sri Lanka Muslim

இல்ஹாம் மற்றும் இன்சாபின் தந்தை இப்ராஹிம் ஒரு ஜே.வி.பி உறுப்பினர்..!!

Contributors

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார். இந்த கைதின் பின்னணியில்

எவ்விதமான அரசியல் பழிவாங்கல்கள் இல்லையெனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இப்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிந்திருக்கும் தன்னுடைய கதை புஸ் வெடியா? அல்லது வெடிகுண்டா என்றார்.


சுயதொழில் புதிய சம்மேளன அலுவலகத்தை நேற்று (18) திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,‘உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பிரதான தற்கொலைதாரிகளான இல்ஹாம் மற்றும் இன்சாப் ஆகியோரின் தந்தையே இப்ராஹிம். இவர்களே சஹ்ரானுக்கு தாக்குதல் நடத்துவதற்காக 30 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளனர்.அந்த 30 மில்லியனை வழங்கிய இப்ராஹிமே ஜே.வி.பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்தார்’ என்றார்.எனவே, இது தொடர்பில் மிக விரைவில் அநுரகுமாரவால் தெளிவுப்படுத்தலை முன்னெடுக்க வேண்டி வருமெனத் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, அவரது புஸ் வெடி கதைகளுக்கு நாம் ஏமாறப்போவதில்லை அது புஸ்வெடியல்ல, வெடிகுண்டு என்பதை, எதிர்வரும் நாள்களில் அவர் பார்ப்பார் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team