இளநீலமாக சீருடை அணிந்தால் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியா? கஜேந்திரகுமார் சபையில் சீற்றம்..! - Sri Lanka Muslim

இளநீலமாக சீருடை அணிந்தால் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியா? கஜேந்திரகுமார் சபையில் சீற்றம்..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மணிவண்ணன் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினர் எனவும் அவரை பாதுகாக்க வேண்டிய தேவையில்லை என்ற போதிலும் இந்த நாட்டில் தற்பொழுது மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லாத நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒரு புறத்தில் இராணுவ மயாக்கமலை மேற்கொள்ளும் அதேவேளை, மறுபுறத்தில் இனவாதத்தை உருவாக்கி வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார். மாநகரசபையின் பாதுகாப்புப் பணியாளர்களது சீருடை இளநீலமாகவோ, கருநீலமாகவோ இருப்பதனால் அவர் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசாங்கம் நாட்டில் பாசிசத்தை உருவாக்கி வருவதாகவும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், இதனைப் பொறுப்புடன் கூறுவதாகவும் தெரிவித்தார். “கடவுளே இந்த நாட்டின் நிலைமையைப் பாருங்கள், தினேஸ் குணவர்தன போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகளே, இவ்வாறான ஓர் நிலைமை இருக்கக் கூடாது” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையில் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team