இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் GM. அப்ராத் அஹ்ஸன் வெண்கல பதக்கம் » Sri Lanka Muslim

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் GM. அப்ராத் அஹ்ஸன் வெண்கல பதக்கம்

b.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்குனர் போட்டிகள் Srilanka Association for The Advancement Of Science இனால் (06, 07 டிசம்பர்) கொழும்பு நுகேகொட நாவலயில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் தரம் 8 பிரிவு மாணவன் அஹ்ஸன் வெண்கல பதக்கத்தை பெற்று நமது பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் இப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா. அடுத்த வருடம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது அந்த நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது .

அம் மாணவனை பல வழிகளிலும் ஊக்குவித்த முன்னால் தொழினுட்ப பிரிவு பகுதி தலைவர் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா அவர்களுக்கும் மாணவனின் பெற்றோருக்கும் அதிபர் MS. முஹம்மட் அவர்களும், ஆசிரியர்களும், பாடசாலை சமூகமும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

(தகவல் :- சௌபாத் இப்னு மஜீட் ,
புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை

b b.jpg2

Web Design by The Design Lanka