இளம் பெண்ணிடம் சேட்டை விட்ட பிரதேச சபையின் உறுப்பினர் கைது! - Sri Lanka Muslim

இளம் பெண்ணிடம் சேட்டை விட்ட பிரதேச சபையின் உறுப்பினர் கைது!

Contributors

இளம் பெண் ஒருவரிடம் சேட்டை விட்ட களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கந்தான பொலி ஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தான, உஸ்வத பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற விருந்துபசாரமொ ன்றில், இளம் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டதாக குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாகபொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் சரணடைந்த போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.(inet)

Web Design by Srilanka Muslims Web Team