இளம் பெண்ணின் ஆடை உருவப்படும் காணொளியை நீங்கள் ஏன் பார்த்தீர்கள்? » Sri Lanka Muslim

இளம் பெண்ணின் ஆடை உருவப்படும் காணொளியை நீங்கள் ஏன் பார்த்தீர்கள்?

SEX

Contributors
author image

BBC

திவ்யா ஆர்யா
பிபிசி


பிகார் மாநிலத்தில் ஜஹானாபாத் எனும் சிறிய நகரத்தில், ஏழு இளைஞர்கள் ஒரு இளம் பெண்ணின் ஆடைகளை உருவிய காணொளி வாட்ஸ் ஆப் குழுக்கள் வழியாக உங்களுக்கு வந்திருக்கும்.

அந்த காணொளியில், பாதிக்கப்பட்ட இளம் பெண் அழுதுகொண்டே தப்பிக்க முயல்வதும், இளைஞர்கள் சிரித்துக்கொண்டே தொடர்ந்து அப்பெண்ணின் ஆடைகளைக் கிழிப்பதும் தெரிகிறது. பரவலாகப் பரவிய இந்த காணொளியினால், போலீஸார் 4 இளைஞர்களைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த காணொளி உங்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால், உங்களது பள்ளி-கல்லூரி-அலுவலக வாட்ஸ் அப் குழு மூலம் உங்களுக்கு வந்திருக்கும்.

தங்களது கோபம் மற்றும் துயரத்தை வெளிப்படுத்தி, `அவமானம்` என கூறி சிலர் இந்த காணொளியை பதிவிட்டிருக்கலாம்.

ஆனால் இந்த பிகார் காணொளி, ஆபாச காணொளிகளை ஷேர் செய்வது போலத்தான் பகிரப்பட்டது. மொபைல் போன்களின் தனி உலகத்தில், இந்து போன்ற காணொளிகளைச் சுலபமாக பார்க்கலாம்.

சிறிய நகரம், பெரிய நகரம் என நாம் எங்கிருந்தாலும், இதுபோன்ற காணொளிகள் நமக்கு வருகின்றன.

2016-ம் ஆண்டு இந்தியாவில் ஆபாசக் காணொளிகள் பார்க்கப்படுவதும், பகிரப்படுவதும் 75% அதிகரித்துள்ளதாக இணையத்தில் பகிரப்படும் காணொளிகளை கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்யும் விடோலி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காணொளிபடத்தின் காப்புரிமைSPENCER PLATT

பகிரப்படும் ஆபாச காணொளிகளில், 80% சிறிய காணொளி என்றும், இந்த காணொளிகளை பார்க்கும் 60% பேர் சிறிய நகரங்களில் வசிக்கின்றனர் என்றும் விடோலி கூறுகிறது.

ஸ்மார்ட்போன் விலை மலிவானதாகக் கிடைக்கின்றன, 3 ஜி மற்றும் 4 ஜி டேட்டாவின் விலையும் குறைந்துள்ளன.

பிகாரின் ஜஹான்பாத் நகரத்தில், இளம் பெண்ணின் ஆடைகளை உருவிய இளைஞர்களிடம், அதனை வீடியோவாக எடுக்க ஸ்மார்ட்போனும், அதனை பகிர இணையமும் இருந்துள்ளது.

ஆனால், பதிவேற்றப்பட்ட காணொளிகளை பார்ப்பதற்கும், பகிருவதற்குமான சக்தி நம்மிடம் மட்டுமே உள்ளது.

ஏன் அந்த காணொளி பார்க்கப்பட்டது? பகிரப்பட்டது?

அதில் என்ன வேடிக்கை?

கூச்சல் போடும் பெண்ணையும், சிரித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களையும், அப்பெண்ணின் ஆடை கிழிக்கப்படுவதையும் பார்ப்பதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது?

தெளிவில்லாத அந்த காணொளியை ஏன் நம் கண்கள் சிரமத்துடன் பார்க்கின்றது? கொஞ்சமாவது சதையை பார்ப்பதற்கான உற்சாகமா? அல்லது அந்த இளைஞர்கள் என்னதான் செய்யப்போகிறார்கள் என்பதை காண ஆர்வமா?

காணொளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த காணொளியை ”வன்முறை ஆபாச படம்” என கூறமுடியாது. ஆபாச வீடியோக்களில் பாலியல் வன்முறை செயல்கள் இருக்கும். இதனைப் பெண்கள் ஏற்றுக்கொண்டு அனுபவிப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.

வன்முறை ஆபாசப் படத்தில், ஒரு ஆண் பெண்ணை அடிப்பது, கட்டாயப்படுத்தி முத்தம் கொடுப்பது. பெண் மீது துப்புவது, முடியைப் பிடித்து இழுப்பது போன்றவற்றை காட்டப்பட்டிருக்கும். அத்துடன், இச்செயல்களை அப்பெண் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு செக்ஸில் ஈடுபடுவது போலவும் காட்டப்பட்டிருக்கும்.

ஆனால், பலாத்கார ஆபாசம் வித்தியாசமானது. ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் பலாத்காரம் செய்வது ‘பலாத்காரம்’ ஆகும்.

ஆபாச படம் எனும் பெயரில், பாலியல் பலாத்கார காணொளிகள் தயாரிக்கப்பட்டு, பரவலாக பார்க்கப்படுகிறது. ஆபாச படத்தை போலவே, பாலியல் பலாத்கார படங்களும் நடிகர்களை வைத்து உயர் தரத்தில் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், நிஜ வாழ்க்கையில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களும், பாலியல் வன்முறைகளும் படமாக்கப்பட்டு இணையத்தில் பகிரப்படுகின்றன. இந்த பிகார் காணொளி பகிரப்பட்டது போலவே, மற்ற பாலியல் வன்முறை காணொளிகளும் மொபைல் போனில் பகிரப்படுகின்றன.

காணொளிபடத்தின் காப்புரிமைSPENCER PLATT

பிகார் காணொளி வைரலாக பரவியதால், போலீஸார் நடவடிக்கை எடுத்து நான்கு பேரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இதுபோன்ற பெரும்பாலான காணொளிகள் வெறும் கிளர்ச்சிக்காக மட்டுமே பகிரப்படுகின்றன. இவை சுலபமாக வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் செல்கின்றன.

ஆபாசப் படங்களைக் கணினிகளை விட மொபைல் போனில் பார்க்கவே மக்கள் விரும்புகின்றனர் என சர்வதேச ஆபாச இணையத்தளமான ‘போர்ன்ஹப்’ கூறுகிறது.

2013-ம் ஆண்டு 45% பேர் தனது இணையத்தை மொபைல் மூலம் பார்த்ததாகவும், 2017-ம் ஆண்டு அது 67%ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் 87% பேர் மொபைலில் பார்ப்பதாகவும் போர்ன்ஹப்பின் சமீபத்திய ஆண்டு அறிக்கை கூறுகிறது.

காணொளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தங்களது இணையத்தைப் பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 121% உயர்ந்துள்ளதாகவும், மற்ற நாடுகளை விட இதுவே மிக அதிகம் எனவும் போர்ன்ஹப் கூறியுள்ளது.

பலாத்கார காணொளிகள் பார்க்கப்பட்டுப் பகிரப்பட்டால், அது எதற்கு வழிவகுக்கும்?

ஒருவர் பாலியல் பலாத்கார காணொளிகளை தொடர்ந்து பார்ப்பது, பாலியல் பலாத்காரத்திற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் என உலகளவில் செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. வழக்கமான பாலுறவில் இன்பத்தைக் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

பிகார் காணொளி, இரண்டு வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக எனக்கும் வந்தது.

அது பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது. அதனை அனுப்பியவர்கள் மீது எனக்கு கோபம் வந்தது.

இதை பகிந்ததன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைத்தது?

இதற்கான பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள்.

Web Design by The Design Lanka