இளம் மாணவ எழுத்தாளர்களுக்கான கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் - மேல்மாகாணகல்விப் பணிப்பளார்,விமல் குணரத்ன - Sri Lanka Muslim

இளம் மாணவ எழுத்தாளர்களுக்கான கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் – மேல்மாகாணகல்விப் பணிப்பளார்,விமல் குணரத்ன

Contributors

-எம்.ரீ.எம்.பாரிஸ்

 

 மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி,அவர்களை சமூகமாற்றத்தின் முக்கியபங்காளிகளாக மாற்றும் அரியகலையே கதையாக்கவெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் பிரழ்வான நடத்தைக் கோலங்களை மாற்றி,அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை கதைசொல்தல் கலைவளர்க்கின்றது. கற்றல் கற்பித்தலில் இக்கலை அதிக அவதானத்தைப் பெற்றுவருகின்றது எனமேல்மாகாணக் கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்னதெரிவித்தார்.

 

 களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான’ஆக்கபூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் தொடர்பான ஆறுமாதச் செயற்றிட்டம் ஒன்றைஆரம்பிப்பது தொடர்பான கூட்டம் அண்மையில் அவரது காரியாலையத்தில் இடம்பெற்ற போதே,அவர் இவ்வாறுதெரிவித்தார்.

 
மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்படித் திட்டத்தைஆரம்பிக்கவுள்ளது. இதில் 30 தமிழ் மற்றும் சிங்களமொழி மூல இளம் மாணவ எழுத்தாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

 

தெரிவு செய்யப்படும் மாணவ எழுத்தாளர்களுக்கானஆறுநாள் நிபுனத்துவப் பயிற்சிசெப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறும். இலவசமாக இடம்பெறவுள்ள இப்பயிற்சிநெறிமுடிவில் 30 கதைகள் தெரிவுசெய்யப்பட்டு,அவைபுத்தகமாக வெளியிடப்படும்.

 

இது தொடர்பாகமேலும் கருத்துத் தெரிவித்தகல்விப் பணிப்பாளர் ‘சமூகமாற்றம் தொடர்பான வித்தியாசமான கருத்து நிலைகளைமாணவச் சமூகம் கொண்டுள்ளது. துரதிஷ்டவசமாக அவைபெரும்பாலும் கருத்திற்கொள்ளப்படுவதுகுவைவு. உறுதியாகபாத்திரவார்ப்பு,கதைக் கருவாக்கம், கள உருவாக்கம்,காட்சிப்படுத்தல் மொழிவெளிப்பாடு, பிரச்சினைகளை அடையாளங்காணுதல், முரண்பாடு மற்றும் முரண்பாட்டு நிலைமாற்றம் தொடர்பான பொறிமுறைகளை எழுத்தில் கொண்டுவருதல் போன்ற பல்வேறுஅம்சங்களில் கரிசனைகாட்டும் இப்பயிற்சிநெறியில் கொழும்புமற்றும் களுத்துறை மாவட்டவளங்குறைந்த பாடசாலை மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

 

மாணவர்களை பெறுனர்கள் என்ற நிலையிலிருந்து மாற்றிகர்த்தாக்களாக ஊக்கப்டுத்தும் இத்தகைய செயற்றிட்டங்களுக்கு நாம் எப்பேதும் ஆதரவளிப்போம்’என்றார்.

செயற்றிடத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் தமது கதைகளை கலந்தாலோசிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். செயற்றிட்டமுடிவில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விஷேட சாற்றுப்பத்திரங்களும் வழங்கப்படும்.

 

இச் செயற்றிட்டத்தில் கலந்து கொள்ளவிரும்பும் மாணவர்கள் தமது பாடசாலைஅதிபரின் அத்தாட்சிப் படுத்தலுடனும்,பெற்றோரின் விருப்ப வெளிப்படுத்தலுடனும் விண்ணப்பங்களைஅனுப்பிவைக்கலாம்.

 

எழுதற்றல்,சிறுகதையாக்கம்,கவிதையாக்கம் மற்றும் மொழித்திறன் ஆகியதுறைகளில் திறமைகளை ஏற்கனவே வெளிப்படுத்திய மாணவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும்.

 

விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிக்குமுன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட வேண்டும். விண்ணப்பமுகவரி –  ஆக்கபூர்வக் கருத்துவெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் பயிற்சிநெறி,தமிழ் பிரிவு,மாகாணக் கல்விப் பணிப்பாளர்,மேல்மாகாணக் கல்வித் திணைக்களம், இலக்கம் 76,ஆனந்தகுமாரசுவாமிமாவத்த,க்ரீன் பாத்,கொழும்பு 7. மேலதிகவிபரங்களுக்கு 0776653694 எனும் இலக்கத்துடன் அலுவலகநேரங்களில் தொடர்புகொள்ளவும்.

Web Design by Srilanka Muslims Web Team