இளம் மாதர் முஸ்லிம் சங்கம்: 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு » Sri Lanka Muslim

இளம் மாதர் முஸ்லிம் சங்கம்: 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு

s.jpg2.jpg3

Contributors
author image

A.S.M. Javid

புனித ரமழானை முன்னிட்டு இளம் மாதர் முஸ்லிம் சங்கம் மூன்றாம் கட்டமாக சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 பேருக்கு பெறுமதியான உலர் உணவுப் பொதிகளையும், பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 5 வறிய மாணவர்களுக்கு புலமைப் பிரிசில் நிதி உதவியும், இரு முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகளும், இரண்டு பேருக்கு சீலிங் மின் விசிரிகள், முதியோர் ஒரு எயார் மெற்றஸ் உள்ளிட்ட பொருட்கள் சங்கத்தின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா தலைமையில் தெமடகொடையில் உள்ள வை.எம்.எம்.ஏ தலைமையகத்தில் வைத்து அண்மையில் வழங்கப்பட்டன.

இதன்போது மௌலவி அப்துல் ஜப்பார் (பஹ்ஜி) அவர்களின் விஷேட துஆப் பிரார்த்தனையுடன் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதியாக டீன்மலே துன்யா இஸ்லாம் அமைப்பின் தலைவர் கலாநிதி வி.ரி.எம். அன்வரும், வை.எம்.எம்.ஏயின் முன்னாள் தலைவர் காலித் பாறுக், இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

s s.jpg2 s.jpg2.jpg3 s.jpg2.jpg3.jpg55 s.jpg2.jpg6

Web Design by The Design Lanka