இளைஞன் -90களிலும் இன்றும் » Sri Lanka Muslim

இளைஞன் -90களிலும் இன்றும்

fa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(Mohamed Nizous)


பேர்ஷில் ஐடி இன்றேல்
பீஷாய் கிழி படுவான்.-அவன்
பேஷ்புக் ஐடி இன்றேல்
நாசம் வாழ்வு என்பான்-இவன்

துப்பாக்கி சத்தத்தில்
தூக்கம் தொலைத்து நிற்பான்
எப்போதும் சற் செய்து
இழப்பான் தூக்கத்தை

செக்பொய்ண்ட் சோதனைகள்
சிரமம் மிகு பயணங்கள்.
லக்‌ஷறி பஸ்களிலே
லைக் பெற ஷெல்பீக்கள்.

ரவுண்டப் நடக்கும்
ராத்திரிகள் பயம் தரும்.
ரவுண்டு ரவுண்டாக
ராப்பகல் மொபைல் கேம்கள்

கரண்டு கட்டானால்
காரிருளில் மாதங்கள்.
இரண்டு நிமிடம் பவர்கட்
ஸ்டேடஸ்கள் fbயில்

அடிக்கடி பாங்கு சொல்லும்
துடித்தோடி போராட்டம்.
பிடிக்காத நபர் நோக
பேஷ்புக் எழுதும் மனப்’பாங்கு’

இப்ப இருக்கின்ற
இந்த வசதிகளை
தப்பாகப் பயன்படுத்தி
தரங்கெட்டுப் போகாதோர்
அப்போது இருந்தோரிலும்
அழகிய நன்மக்களாம்.

Web Design by The Design Lanka