இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எ.எல்.எம். றிஸான் சர்வதேச 'வெள்ளி' விருதுக்கு தெரிவு - Sri Lanka Muslim

இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எ.எல்.எம். றிஸான் சர்வதேச ‘வெள்ளி’ விருதுக்கு தெரிவு

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

பிரித்தானிய நாட்டின் ‘எடின்பார்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எ.எல்.எம். றிஸான் சர்வதேச ‘வெள்ளி’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்விருது வழங்கும் நிகழ்வு 14.09.2014ம்; திகதி ஞாயிற்றுக் கிழமை பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
 
இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம், சமூக அபிருத்தி செயற்பாடுகளுக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இவர் ஆரம்ப கல்வியை கமு /அல் – ஹிலால் வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியை கமு/ஸாஹிறாக் கல்லூரியிலும், தற்போது திறந்த பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞான பீட மாணவனும் ஆவார். 2006ம் ஆண்டு சாரணியத்தில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதைப் பெற்றுக் கொண்டார். 2008ம் ஆண்டு ‘சர்வதேச எடின்பார்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச வென்கல விருதை பெற்றுக் கொண்டார்.
 
2011ம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார். தற்போது தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

 

இவர் ஆதம்லெவ்வை சித்தியும்மா தம்பதிகளின் 02 வது புதல்வர் ஆவார்.

 

06

Web Design by Srilanka Muslims Web Team