இளைஞர் பாராளுமன்றத்தின் 10 ஆவது அமர்வின் பிரதம அதிதியாக கோட்டபய ராஜபக்ஷ - Sri Lanka Muslim

இளைஞர் பாராளுமன்றத்தின் 10 ஆவது அமர்வின் பிரதம அதிதியாக கோட்டபய ராஜபக்ஷ

Contributors
author image

Editorial Team

சிறந்த எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 10 ஆவது அமர்வு கடந்த 30, 31 ஆம் திகதிகளில் மகரகமையில் அமைக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்  இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன.
 
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலளார் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
 
இந்த நிகழ்வில் அவர் உரையாற்றியபோது-
 
சமூகத்தில் மறைந்துள்ள எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துணிவுடன் முகங்கொடுக்கும் பயிற்சிகளை வழங்கவும்  இந்த இளைஞர் பாராளுமன்றச் செயற்பாடுகள் பெரிதும் உதவும் என்று கூறினார்.
 
நாடு முழுவதிலும் இருந்து 412 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்  இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி. சூரியப்பெரும, தகவல் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team