இவ்வரசினால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளது. - அஸாத் சாலி - Sri Lanka Muslim

இவ்வரசினால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளது. – அஸாத் சாலி

Contributors

அரசாங்கம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து அநீதி இழைத்த வண்ணமே உள்ளது. இச்செயற்பாட்டை அரசு மேலும் தொடர்ந்தால் நாங்கள் சர்வதேசத்தை நாடவேண்டியேற்படும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி எச்சரித்தார்.

 

நேற்று நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிக்கையில்:-

 

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு தொப்பிஇ நிக்காப் மற்றும் ஹிஜாப் அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என அரசு நிபந்தனையிட்டுள்ளது. இதுவரைக்கும் எந்தவொரு அரசும் விதிக்காத நிபந்தனைகளை இவ்வரசு விதித்துள்ளது.

 

அத்தோடு நேற்று கொழும்பின் தெஹிவளையில் மூன்று பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை குறித்த பிரதேசத்தை மையமாகக் கொண்ட நகரசபை தடை விதிக்கவில்லை. மாறாக பொலிஸாரே தடைவிதித்துள்ளனர். இவையனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடாகும்.

 

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் இவ்வரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளது. இது தொடர்பாக நாங்கள் ஊடகங்களுக்கு முன்பு கருத்து வெளியிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடு தொடர்ந்த வண்ணமே இருப்பதனால் நாங்கள் சர்வதேசத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.(vidivel)

 

Web Design by Srilanka Muslims Web Team