இஸ்ரேலின் 11 புலனாய்வாளர்களுக்கு ஹமாஸ் தண்டனை - Sri Lanka Muslim

இஸ்ரேலின் 11 புலனாய்வாளர்களுக்கு ஹமாஸ் தண்டனை

Contributors

-காசா சிட்டி

இஸ்ரேல் நாட்டிற்கு இன்பார்மர்களாக செயல்பட்டதாகக் கூறி 11 பேரை ஹமாஸ் போராளிகள் படுகொலை செய்துள்ளனர்.

 

காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியதில், ஹமாஸ் இயக்கத்தின் 3 கமாண்டர்கள் கொல்லப்பட்டனர். தங்கள் இயக்கத்தின் தலைவர்களை குறிவைக்கும் இஸ்ரேலை பழிதீர்ப்பதாக ஹமாஸ் சபதம் செய்தது.

 

இந்நிலையில், இன்று அதிகாலையில் இன்பார்மர்கள் என்று சந்தேகிக்கப்படும் 11 பேரை காசா நகர காவல் தலைமையகத்தில் கொன்றதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் 11 பேரும் ஏற்கனவே காசா நீதிமன்றங்களால் தண்டனை பெற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த இவர்கள், ஹமாஸ் தலைவர்களின் இருப்பிடம் பற்றி தகவல் தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team