இஸ்ரேலுடன் செய்து கொண்ட ரூ.3,250 கோடி பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம் ரத்து » Sri Lanka Muslim

இஸ்ரேலுடன் செய்து கொண்ட ரூ.3,250 கோடி பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம் ரத்து

55

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 இஸ்ரேலுடன் செய்து கொண்ட ரூ.3,250 கோடி பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ‘ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்’ என்ற நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.3,250 கோடி) ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக 2014–ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துவிட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரபேல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இஷாய் டேவிட் நேற்று வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தத்தை ரத்து செய்து இருப்பதாக இந்தியாவின் ராணுவ அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு வந்துள்ளது.

இதனால் நாங்கள் வருத்தம் அடைகிறோம். அதே நேரம், இந்திய ராணுவ அமைச்சகத்துடன் நாங்கள் எப்போதும் போல் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’’ என்றார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ 4 நாள் பயணமாக வருகிற 14–ந் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

Web Design by The Design Lanka