இஸ்ரேல் உருவாவதற்கு முந்தைய பலஸ்தீனின் வரைபடம் பொறிக்கப்பட்ட ஆடையுடன் கால்பந்து க்ளப்! - Sri Lanka Muslim

இஸ்ரேல் உருவாவதற்கு முந்தைய பலஸ்தீனின் வரைபடம் பொறிக்கப்பட்ட ஆடையுடன் கால்பந்து க்ளப்!

Contributors

 

ஜெர்ஸியில் முதல் நம்பருக்கு பதிலாக ஃபலஸ்தீனின் முழுமையான வரைபடத்தை வரைந்து சிலியின் டிப்போர்டிவோ ஃபலஸ்தீனோ க்ளப் மைதானத்தில் ஆடுகிறது. 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாவதற்கு முந்தைய ஃபலஸ்தீனின் வரைபடத்தை இந்த கிளப் ஜெர்ஸியில் வரைந்துள்ளது.

 

அதிகமான ஃபலஸ்தீன் அகதிகள் வாழும் நாடுகளில் ஒன்றான சிலியின் தலைநகரமான ஸாண்டியாகோவில் 1920-ஆம்ஆண்டு இந்த க்ளப் துவக்கப்பட்டது .ஃபலஸ்தீன் கொடியின் நிறம்தான் சிலியின் அதிக பிரபலமான அணிகளில் ஒன்றான இக்க்ளப்பின் ஜெர்ஸியில் இடம் பெற்றுள்ளது.

 

க்ளப்பின் நடவடிக்கையை கண்டித்து யூத அமைப்புகள் சர்வதேச கால்பந்து கழகமான ஃபிபாவிடம் புகார் அளித்துள்ளன. மேற்காசியாவின் மோதலை சிலிக்கு இறக்குமதிச் செய்வதற்கான முயற்சியே இந்நடவடிக்கை என்று சிலியில் உள்ள யூத அமைப்பின் தலைவர் கூறுகிறார்.

 

ஜெர்ஸியை தடைச் செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சிலியின் ஃபலஸ்தீன் ஃபெடரேசன் தலைவர் கூறுகையில், ’ஃபலஸ்தீன் பிரச்சனையை சிலிக்கு இழுக்கக்கூடாது என்று கூறிவிட்டு பிள்ளைகளை இஸ்ரேலுக்கு ராணுவப் பயிற்சிக்கு யூதர்கள் அனுப்புகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். சிலியில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட  ஃபலஸ்தீன் மக்கள் உள்ளனர்.(thoothu)

Web Design by Srilanka Muslims Web Team