இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக மீண்டும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் - Sri Lanka Muslim

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக மீண்டும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

Contributors

ஜெருசலமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் நான்காவது தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது தலைமையை முடிவுக்குக் கொண்டுவர இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.

கடந்த ஆண்டின் பல சந்தர்ப்பங்களில் 71 வயதான நெதன்யாகுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களை விடவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானோர் கலந்து கொண்டனர்.

அதன்படி சுமார் 20 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நெதன்யாகு மீது தேர்தல் நடைபெற்றதில் அழுத்தம் அதிகரித்துள்ளது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தவறாக நிர்வகித்ததாக விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரபு நாடுகளுடனான தொடர்ச்சியான இயல்பாக்குதல் ஒப்பந்தங்களுடன், மூன்று முடக்கல்களுக்குப் பிறகு பொருளாதாரத்தின் பெரும்பகுதியைத் திறக்க அனுமதித்த தனது அரசாங்கத்தின் விரைவான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் வெற்றியை நெத்தன்யாகு நம்புகிறார்.

எனினும் இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டுகளை நெதன்யாகு எதிர்கொள்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team