இஸ்ரேல் - லெபனான் எல்லையில் முறுகல் - Sri Lanka Muslim
Contributors

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கட்டுகள் இஸ்ரேலின் வடபகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.

கிரியட் ஸ்மோனா நகருக்கு அருகே இந்த ராக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது. ஆனால், சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

தாம் பதிலுக்கு ஆர்ட்டிலறி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும் லெபனானிய தீவிரவாத அமைப்பான ஹெஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான போரை அடுத்து, 2006ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பெருமளவில் அமைதியாகவே இருந்து வந்தது.

ஆனால், முன்னணி அரங்கப் பகுதியில் லெபனானிய இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதலில், வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த இரு வாரங்களாக அங்கு பதற்றம் அதிகரித்திருந்தது.

Web Design by Srilanka Muslims Web Team