இஸ்லாத்திற்கு எதிரான இனவாத தீச்சுவாலை, இயற்கை சீற்றத்தால் அணைப்பு » Sri Lanka Muslim

இஸ்லாத்திற்கு எதிரான இனவாத தீச்சுவாலை, இயற்கை சீற்றத்தால் அணைப்பு

flood

Contributors

Ibnu Asad 


‘(அவர்களும்) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்த வனாவான்.’ (அல்குர்ஆன்-3:54)

நல்லாட்சி அரசில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு உற்பட்ட ஓர் ஆண்டே 2௦17 ஆகும்.

இவ்வாண்டில் மார்ச் மாதத்தில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் விதத்தில் வில்பத்து விவகாரம் அமைந்தது. அது தனியும் போது, நாடாளாவிய ரீதியில் ஏப்ரல் மாதம் 16ம் திகதியிலிருந்து மே மாதம் 21ம் திகதி வரை சுமார் 15 முஸ்லிம் வர்த்தகர்களுக்கு உரிமையான வியாபார நிலையங்களுக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது பற்றிய விரிவான ஊடாக அறிக்கை “போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

மே மாதம் முழுவதும் இதுபற்றி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு முஸ்லிம் சிங்கள உறவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு முஸ்லிம்கள் அடுத்து தமதூர் அல்லது தனது வணிக நிலையம் பாதிக்கலாம் என்று அச்சத்துடன் வாழ்ந்த காலம். என்றாலும் மே மாதம் இறுதியை அடையும் போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு தென்பகுதியில் இன மத வேறுபாடு இன்றி சுமார் 6௦௦ ௦௦௦ பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகினர்.

இதனால் ரமழானுடன் கழிந்த ஜூன் மாதத்தில் வெள்ள அனர்த்தம் சார்ந்த விடயங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டதுடன் இன மதத்தை தாண்டி சமூகமும், அரசும், ஊடகங்களும் வெள்ள அனர்த்த உதவிகள் பற்றி ஆராய துவங்கியது. இதனால் இனவாதத்தீ அணைந்தது. என்றாலும் இரு மாத காலப்பகுதியில் தென் பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதுடன் இனவாதத்தின் இரண்டாம் ஆட்டம் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவு நிலையங்களில் உண்ண வேண்டாம் என்ற பிரச்சாரத்துடன் ஆரம்பமாகியது. அது இறுதியாக ஓர் விபத்தில் சிக்கி கின்தொட்டை கலவரத்தை தோற்றுவித்தது..

மீண்டும் சமூக வலைத்தளத்தில் இது பற்றிய விவகாரம் உச்ச நிலையை அடைய இருந்த நிலையில் திடிரென நவம்பர் 29ம் திகதி “ஓகி” என்ற சுறாவளி இலங்கையை தாக்கி தற்போதைய கணக்கெடுப்பின் படி சுமார் 25 ௦௦௦ பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் சமூக வலைத்தளங்கள் அது பற்றி ஆராய தொடங்கியுள்ளது. அரசும் பெப்ரவரி தேர்தலை இலக்காகக் கொண்டு தமது நிதி உதவிகளை நாளை (௦2.12.2௦17) காலை முதல் வழங்கவுள்ளது. இதனால் இஸ்லாத்திற்கு எதிரான இனவாத தீச்சுவாலை அணைந்துள்ளது.

‘(அவர்களும்) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்த வனாவான்.’ (அல்குர்ஆன்-3:54)

அல்ஹம்துலில்லாஹ்

Web Design by The Design Lanka