“இஸ்லாமியவாதி”, எப்போது “இயக்கவாதி” என அறியப்படுகிறார்? - Sri Lanka Muslim

“இஸ்லாமியவாதி”, எப்போது “இயக்கவாதி” என அறியப்படுகிறார்?

Contributors

(Mohamed Ashik)

இஸ்லாமியவாதி தன்னை முஸ்லிம் என்றோ இஸ்லாமியவாதி என்றோ சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். ஆனால், இயக்கவாதி இயக்கம் சார்ந்த பெயரில் மட்டுமே தன்னை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார்.

இஸ்லாமியவாதி, குர்ஆன் ஹதீஸ் தாவா லிங்க் போடணும்னா அதை அவர் எந்த இயக்கத்தின் / இயக்கமே இல்லாத தளத்தில் இருந்தும் அதன் லிங்கை ஷேர் பண்ணி எடுத்துப்போடுவார்..! ஆனால்… இயக்கவாதி, தனது இயக்கத்தின் லிங்க் மட்டுமே ஷேர் பண்ணுவார்.

இஸ்லாமியவாதி, குர்ஆன் ஹதீஸில் தானே ஆய்ந்தறிந்து அல்லது பிறரின் ஆய்வுகளை எல்லாம் முழுதாக படித்து, அவற்றை ஆய்ந்து “எது ‘சரி’ யான ஆய்வு”, என்று ஒரு முடிவுக்கு வருவார். இயக்கவாதி, தன் இயக்கம் சொன்ன குர்ஆன் ஹதீஸ் புரிதல்களை மட்டுமே சரிகான்பார். மற்றவர் சொல்வதை படிக்கவோ ஆயவோ மாட்டார். அதாவது, இயக்கம் ஒன்றை சொல்லும் வரை இவருக்கு ‘சரி’ என்று மனதுக்கு பட்ட ஒரு விஷயம், இயக்கம் ‘தவறு’ என்றதும் அன்றிலிருந்து அவருக்கும் அது ‘தவறு’ என்றாகிவிடும். அதே, இயக்கம் மீண்டும் ஒருநாள் அதே விஷயத்தை ‘சரி’ என்றதும், மீண்டும் அன்றிலிருந்து அந்த விஷயம் அவருக்கும் ‘சரி’ என்றாகிவிடும்.

இஸ்லாமியவாதி, ஒரு குறிப்பிட்ட புதிய விஷயத்தில் தனது சரி/தவறு என்ற கருத்தை குர்ஆன் ஹதீஸ் ஆய்வின் அடிப்படையில் தனது நிலைபாட்டை தெளிவாக ஆய்வு முடிந்த உடனேயே சொல்லி விடுவார். ஆனால், இயக்கவாதியோ, ‘அது பற்றியான பதில் தனது இயக்க தளத்தில் இருக்கா’ என்று பார்ப்பார். இல்லை எனில், அங்கே ஒரு கேள்வியை போட்டு வைத்து விட்டு, அதற்கான பதில் அங்கே வரும் வரை… அது பற்றி சிந்திக்காமல், அதில் தன் கருத்தாக ஏதும் எவரிடமும் சொல்லாமலும் மெளனித்து இருப்பார். இயக்க பதில் அறியும் வரை அந்த பிரச்சினையில், எவர் கருத்தையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டார்.

இஸ்லாமியவாதி, எவர் சரி/தவறு செய்தாலும் ‘அவர் என்ன இயக்கம்/யார் சப்போர்ட் அவர்’ என்று எந்த கவலையும் படமால் அதை ‘சரி’/ ‘தவறு’ என்று சொல்வார். பாராட்டுவார் / கண்டித்து எதிர்ப்பார் . ஆனால், இயக்கவாதியோ, தனது இயக்கத்தை சார்ந்த ஒரு ‘கொள்கை சகோ’ செய்தது குர்ஆன் ஹதீஸ் படி தப்பு என்று தெரிந்தாலும், அதை தனது இயக்கவாதி செய்து விட்டதால் எப்படியாவது அவரை ஆதரிக்க ஏதாவது சொல்லி சப்பை கட்டுவார் அல்லது அவர் செய்தது பற்றி எதிர்த்து/கண்டித்து ஏதுமே கருத்து சொல்லாமல இறுதி வரை மெளனித்தே இருப்பார்.

இஸ்லாமியவாதியின் பிறர் மீதான விமர்சனத்தில் உண்மையும் கண்ணியமும் நேர்மையும் இருக்கும். அனால், இயக்கவாதியின் விமர்சனத்தில் கேலியும் கிண்டலும் தனி நபர் சாடலும் நேர்மையின்மையும் நிறைந்து இருக்கும்.

இஸ்லாமியவாதி, எந்த முஸ்லிமுடனும் / எந்த இஸ்லாமிய இயக்கத்துடனும் அவர்/அது செய்யும் “நன்மைகளிலும் இறையச்சத்திலும் (தம்மையும் இணைத்து) ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்”. எந்த முஸ்லிமுடனும் / எந்த இஸ்லாமிய இயக்கத்துடனும் அவர்/அது செய்யும் “தீமைகளிலும் பாவங்களிலும் இணையாமல் விலகி” இருப்பார். அதை ‘தவறு’ என்று சொல்லி எதிர்த்துக்கொண்டு இருப்பார். அதாவது, ஒரு இயக்கம் செய்வது சரி/தவறு என்று இவரால் கண்டு பிடிக்க முடியும்..! ஆனால், இயக்கவாதி, தன் இயக்கத்தின் எல்லா செயலையும் ஆதரிப்பார். எதையும் பிழை காண மாட்டார். இவரிடம்… “உங்கள் இயக்கமும் அதன் தலைவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்களா?” என்று யாரேனும் கேட்டால், ‘எங்கள் இயக்கமும் தவறு செய்யக்கூடும்; எம் தலைவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர் இல்லை; தவறு செய்து இருக்கிறார்கள்’ என சொல்வார்களே அன்றி… ஒரு போதும் இயக்கம் தனது செயலை தானே முன்வந்து ‘தவறு’ என்று ஒப்புக்கொள்ளும் வரை… இவர்கள் அச்செயலை ‘தவறு’ என்று இயக்கத்துக்கு முன்னரே முந்திக்கொண்டு கண்டு பிடித்ததே இல்லை..!

 

Web Design by Srilanka Muslims Web Team