இஸ்லாமிய அடையாளம் தவிர் (கவிதை) » Sri Lanka Muslim

இஸ்லாமிய அடையாளம் தவிர் (கவிதை)

islam

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஜுப்பா போடாதே
தப்பாக நடப்பதென்றால்,

தலையை மறைக்காதே
பிழையாக ஓட்டும் போது,

துருக்கித் தொப்பி வேண்டாம்
குறுக்கால பூரும் வேளை,

முஸ்லிம் ஐடி தவிர்
முக நூலில் ‘அது’ போட,

பாத்திமா என்று சொல்லாதே
பாட்டுக் கேட்டு கோல் எடுத்து,

தாடியை எடுத்து விடு
காடைத் தனம் செய்வதென்றால்,

அபாயாவை விட்டு விடு
அபாய மருந்து கடத்தும் போது,

மாஷா அள்ளாஹ் ஸ்டிக்கரை
பேசாமல் கழற்றி விடு
புகை கக்கும் வாகனத்தை
பகை வளர்த்து ஓட்டும் போது…

இப்படிச் சொன்னவுடன்
எரியும் பலருக்கு
இஸ்லாத்தின் அடையாளத்தை
இல்லாமல் ஆக்கிறாயா
முஸ்லிமா நீயெல்லாம்
முறைப்பார் சில பேர்கள்.

அடையாளம் காட்டாமல்
அவனவன் தப்பு செய்தால்
முடிந்து போகும் அவனுடன்
முஸ்லிமென காட்டிக் கொண்டு
அடாவடிகள் செய்வோரால்
அள்ளாஹ்வின் மார்க்கத்தையே
கடுமையாய் நோக்குகிறார்
கலிமாச் சொல்லாதோர்.

கேட்டுப் படிப்பதிலும்
ஆட்களைப் பார்த்தே
மார்க்கம் இதுவென்று
மனிதர் புரிகின்றார்.

தப்பான நடத்தைகளை
தவிர்த்துத் திருந்துங்கள்.
அப்படி உங்களால்
ஆக முடியாதெனின்
அடையாளம் காட்டி
அவமானப் படுத்தாமல்
விடயத்தை செய்யுங்கள்
விழுதலும் வேதனையும்
உங்களுடன் முடியட்டும்
ஊரார்க்கு வேண்டாம்.

Web Design by The Design Lanka