இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறதா? » Sri Lanka Muslim

இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறதா?

face

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdur Rahman – Akkaraipattu


இஸ்லாத்தின் மீது வெறுப்புக் கொண்டோர் வைக்கும் முதல் குற்றச்சாட்டு . இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது. இந்த ‘ஒடுக்குதல்’ என்ற சொல்லின் வெளிப்பார்வையில் இவர்கள் சொல்ல முயல்வது பெண்களுக்கு பர்தா எனும் ஆடை போட திணித்து அவர்களுக்கு ‘ஆடைச் சுதந்திரம்’ வழங்காமல் இருக்கிறது.

ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவன் ஒரு ஆணைப் பார்த்தால் அவ்வளவு சீக்கிரம் உணர்நிலைக்கு போக மாட்டாள். ஆனால் ஒரு ஆணைப் பொறுத்தவரை பெண்ணின் அங்க அழகை பார்த்த மாத்திரத்தில் உணர்நிலைக்கு செல்கிறான்.

ஆண் – பெண் என்ற இரு சாராரையும் ஒப்பிடும் பட்ஷத்தில் இன்று சினிமாவோ மேற்கத்தையமோ மீடியாவோ பெண்ணியமோ ஒரு போகப்பொருளாக பெண்ணைத் தான் பார்க்கிறது. ஆணை அல்ல.

எல்லாத்தயும் Black and White இல் போட்டு பெண்களை கவர்ச்சியாக்கி கலரில் போடும் பத்திரிகைகள் தொடக்கம், நடிகனுக்கு கௌரவமான ஆடைகள் கொடுத்து நடிகைக்கு ரெண்டு கைக்குட்டைத் துண்டுகள் போட்டு கவர்ச்சியாகக் காட்டும் சினிமா தொட்டு, அவிழ்த்து விட்டு பெண் நடமாடுவது சுதந்திரம் என கருத்துக்கள் பரப்பும் மேலை நாடுகள் வரை பெண்களை ஒரு போகப்பொருட்களாகவே பார்க்கிறது என்றால் மறுக்க முடியாத பேருண்மை.

ஏன் பேஸ்புக்குகளில் கூட, கேவலம் பெண் பேக் ஐடிகளில் எவளோ ஒருத்தியின் புகைப்படத்தை பொய்யாக பதிவேற்றும் போது மொய்க்கும் ஆண் ஐடிகளை நாம் பார்க்கவில்லையா.

ஆண்களை வல்லுறவுப்படுத்திய பெண்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா?. அல்லது பெண்களை வல்லுறவுப்படுத்திய ஆண்கள் என கேள்விப்பட்டிருக்கிறோமா?. நிச்சயம் முதல்வகையினர் மிக மிக மிகச்சொற்பம்.

ஏனெனில் பெண் கூச்ச சுபாவம் உள்ளவள். ஆண் வெளிப்படையானவன்.
இந்த வெளிப்படையானவர்களை பாதுகாக்க ஒரு தற்காப்புத் தான் பெண் என்ற கூச்ச சுபாவமுள்ளவளுக்கு தேவைப்படுகிறது.
அதற்கு நீங்கள் இட்ட பெயர் “பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை”.

ஆடைக்குறைப்புத் தான் சுதந்திரமா. அல்லது அவள் ஒழுக்கமாக ஆடை அணிந்து ஆண்களின் மோகவலையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது சுதந்திரமா.

அவிழ்த்து விட்டு திரிந்தால் பெண் சுதந்திரம் என பறைசாற்றும் மேலை நாடுகளில் தான் கூடுதலான பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகின்றன. கணிப்புகள் சொல்கின்றன.

அவிழ்த்து ஆடிய நடிகைகள் தான் கூடுதலாக தற்கொலைகள் செய்கின்றனர் . கணிப்புகள் சொல்கின்றன.

அதாவது பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள்.
எல்லாவற்றையும் கொண்டுதான் இஸ்லாம் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பின்வரும் ஆடை அமைப்பை வரையறை செய்கிறது.

#வெளியில் உடுத்தும் ஆடை இறுக்கமாய் அமைந்திருக்கக்கூடாது

#உணர்ச்சி நிலையை தூண்டக்கூடிய அங்கங்களை கட்டாயம் மறைத்தே ஆகவேண்டும்.

#மெல்லிதான ஆடைகளை அணியக்கூடாது..

இது போக பெண்களுக்கென்று விஷேடமாக

#மார்பகங்களை ஆடவர்களின் கண்பார்வையை விட்டும் தவிர்க்க தடைச்சீலைகள் அணிய வேண்டும் எனவும். முகம், கரண்டைக் கால்கள் தவிர (இதனை விரும்பினால் மறைத்துக் கொள்ளலாம். ) இதர அங்கங்கள் தெரியக்கூடாது என்றும் கட்டளை இட்டிருக்கிறது இஸ்லாம்.

சுருக்கமாகச் சொன்னால் மேலைத்தேயமும் சினிமாவும் பெண்ணியம் பேசுவோரும் பெண்களை கவர்ச்சிப் பொருட்களாகப் பார்க்கிறார்கள்.. ஆனால் இஸ்லாம் கண்ணியமாகப் பார்க்கிறது.

அவளின் தொடை தெரிய வேண்டும். தொப்புள் தெரியவேண்டும். கக்கம் தெரிய வேண்டும். அங்கம் தெரிய வேண்டும். அதை நான் நாலு பேருடன் சேர்ந்து ரசிக்க வேண்டும் என்றால் ‘அதற்கு பெயர் பெண் சுதந்திரம்” என்று வால் பிடிக்காமல் நீங்கள் மூடிக்கொண்டு செல்லலாம்.

இஸ்லாத்தின் மீது வெறுப்புக் கொண்டோரே! மீடியா சொல்வதை கண்மூடித்தனமாக நம்புபவரே!

உங்கள் வெறுப்புணர்ச்சியை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறதா என இஸ்லாமிய புத்தகங்களிலோ வெப்சைட்டுகளிலோ தூயநிலையில் ஆய்வு செய்யுங்கள்.

இஸ்லாம் ஏன் வளர்கிறது. ஈர்க்கப்படும் மக்களில் ஏன் பெண்கள் அதிகமதிகம் என்று ஒரு கணம் சிந்தியுங்கள்.

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் எனில் ஏன் அதிகமதிகள் பெண்கள் ஈர்க்கப்பட வேண்டுமென அழகிய முறையில் சிந்தியுங்கள்.

அதை விடுத்து சல்மா சொன்னார். சாலிக்காக்கா சொன்னார் என்று வராமல்.

(தொகுத்தவைகள்)

Web Design by The Design Lanka