இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுப்பேன்: பாஜக தலைவர் அதிரடி! » Sri Lanka Muslim

இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுப்பேன்: பாஜக தலைவர் அதிரடி!

mm5

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


இந்தியா உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத் பாஜக தலைவர் பவன் அகர்வால், முதலவர் யோகி ஆதித்யநாத்தின் ஜாதீய நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றது முதல் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தலித் இன மக்கள் வாழும் பகுதிக்கு செலும் முன்பு தலித் இன மக்கள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்று சோப்பு உள்ளிட்டவைகள் வழங்கி தலித் இன மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கப்பட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மொராதாபாத் பாஜக தலைவர் பவன் அகர்வால் யோகி ஆதித்யநாத்தின் ஜாதீய நடவடிக்கைக்கு எதிராக வரும் ஜூலை 1ஆம் தேதி இஸ்லாம் மதத்தை தழுவவுள்ளதாக அறிவித்து யோகிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் மதம் மாறினாலும் தொடர்ந்து கட்சிப் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka