ஈராக்கில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 48 பேர் பலி - Sri Lanka Muslim

ஈராக்கில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 48 பேர் பலி

Contributors

ஈராக்கில் பிரதமர் நூரி அல் மாலிக்கின் ஆட்சிக்கு எதிராக சன்னி போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இச்சண்டையானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று பாக்தாத் உள்ளிட்ட பல இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

 
இந்த தாக்குதல் பெரும்பான்மையாக ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்துள்ளது. தலைநகர் பாக்தாத் பகுதிகளில் ஷியா மக்கள் வசிக்கும் ஏழு இடங்களில் கார்குண்டுகள் வெடித்தன. இதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.

 

அன்பர் மாகாணத்தின் பல இடங்களில் போலீசாருடன் பழங்குடியினர்கள் மற்றும் அல்கொய்தா தொடர்புடைய போராளிகள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இந்நிலையில் சர்வதேச சமூக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நூரி அல்மாலிக்கி, ‘அல்கொய்தாவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து சண்டையிடவேண்டும். அல்கொய்தா அமைப்புக்கு வரும் நிதிகளை தடுத்து நிறுத்தவேண்டும். இவர்களுக்கு ஆதரவும், புகலிடமும் அளிப்பவர்கள் நமது இலக்காக இருக்க வேண்டும்’ என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team