ஈராக்கில் ISIS மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீச்சு - Sri Lanka Muslim

ஈராக்கில் ISIS மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீச்சு

Contributors
author image

World News Editorial Team

ஈராக்கில் முன்னேறி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.  தன்னாட்சி உரிமை பெற்றுள்ள குர்தீஷ்தானிலும் சில பகுதிகளை பிடித்து தங்கள் வசம் வைத்துள்ளன.

 

இதனால் இடம்பெயர்ந்த மக்கள் வேறு மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

 

 அவர்களை காக்க அமெரிக்கா, விமானங்கள் மூலம் அவர்களுக்கு உணவு, தண்ணீர், வீசியதுடன் குர்தீஷ்தானில் ISIS  நிலை மீது குண்டு வீச்சு நடத்தி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது.

 

இதுவரை அங்கு 124 தடவை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. இதனால் ISIS இன் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

 

அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்தீஷ் படைகள் பல பகுதிகளை மீண்டும்மீட்க போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
ஆனால் அப்பகுதி முழுவதையும் மீட்க அமெரிக்க போர் விமானங்கள் ISIS  மீது நேற்று குண்டு மழை பொழிந்தன. அதில், ISIS  இன் 16 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. பல வாகனங்கள் சேதம் அடைந்தன.

 

இந்த தகவலை அமெரிக்காவின் மத்திய கமாண்டர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team