ஈரானிடம் மூன்றாம் தரப்பு ஊடாக எண்ணெய் வாங்கும் இலங்கை!- மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! » Sri Lanka Muslim

ஈரானிடம் மூன்றாம் தரப்பு ஊடாக எண்ணெய் வாங்கும் இலங்கை!- மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

28m9

Contributors

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார்.

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை  இலங்கை நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் இலங்கை நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை இலங்கை நிறுத்தியுள்ளது. எனினும், அமெரிக்காவின் தடையை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக ஈரானிய மசகு எண்ணெயை இலங்கை வாங்குவதாக, அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்தே, அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியிடம்  அமெரிக்கத் தூதுவர் சிசன் கையளித்த சிறப்புச் செய்தியில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இலங்கை உடனடியாக நிறுத்தத் தவறினால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இராஜதந்திர ரீதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.lwin

Web Design by The Design Lanka