ஈரானில் 03 இடங்களில் தீவிரவாத தாக்குதல்: 12 பேர் பலி » Sri Lanka Muslim

ஈரானில் 03 இடங்களில் தீவிரவாத தாக்குதல்: 12 பேர் பலி

IR66

Contributors
author image

Editorial Team

ஈரானில் நாடாளுமன்றம் உட்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் நாடாளுமன்றத்துக்குள் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் கும்பல் இன்று அதிரடியாக உள்ளே நுழைந்தது.

துப்பாக்கி முனையில் எம்பிக்கள் சிலரையும் பிணைக் கைதிகளாக அந்த கும்பல் சிறை பிடித்தது. இதையடுத்து எம்பிக்களை மீட்க ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இத்தாக்குதல் நடந்த அதேநேரம் டெஹ்ரானில் கொமேனி தர்கா அருகே தற்கொலைப்படை பெண் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குறித்த தாக்குதலையும் ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

டெஹ்ரானில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து மர்ம நபர்களுக்கும் ஈரான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. எம்பிக்களை சிறைப்பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள.

பாதுகாப்பு அதிகாரி ஒருவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் காரணம் குறித்த எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்

Web Design by The Design Lanka