ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி - Sri Lanka Muslim

ஈரான் சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அனுமதி

Contributors

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களுக்கு தமது சொந்த பள்ளிவாசல்களை திறக்க அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அனுமதி அளித்துள்ளார்.

சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில், அவர்கள் மீதான தடைகளை அகற்ற ஜனாதிபதி ரவ்ஹானி ஒப்புக்கொண்டுள்ளார். ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஈரானில் சுன்னி முஸ்லிம்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் 9 சுன்னி பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்துவதில் ஈரான் நிர்வாகம் அடிக்கடி தடங்கலை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டது. 1979 புரட்சிக்கு பின் டெஹ்ரான் நகரில் சுன்னி முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவது தடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஈரான் சீர்திருத்த அமைப்பினர் சுன்னி முஸ்லிம்களுக்கு வெள்ளிக் கிழமை மற்றும் பெருநாள் தொழுகைகளுக்கு மாற்று இடங்களை பெற்றுக்கொடுக்க கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team