ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும்: ஒபாமா - Sri Lanka Muslim

ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும்: ஒபாமா

Contributors

ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிப்பதற்கு 6 மாத கால அவகாசம் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கோரியுள்ளார்.

அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் ஈரானின் அணுத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி கால அவகாசத்தை கோரியுள்ளார்.

ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ள நிலையில் ஒபாமா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இணப்பாடொன்று எட்டப்படாத பட்சத்தில் தெஹ்ரான், யுரேனியம் செறிவாக்கும் நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஈரானுடனான அணுத் திட்டம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரனுக்கும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொளஹானிக்கும் இடையில் பேச்சுவாரத்தை இடம்பெற்றுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team