ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்தாரி ஸஹ்ரானை வழிநடத்தியது நௌபர் மௌலவி..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்தாரி ஸஹ்ரானை வழிநடத்தியது நௌபர் மௌலவி..!

Contributors
author image

Editorial Team

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்ற நபரால் வழிநடத்தப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். சஹ்ரான் ஹாசிம் முதன்முதலில் 2017 இல் அலியார் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தினார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டது. இதில் அவர் பல ஆண்டுகளாக கட்டார் இராச்சியத்தில் இருந்த முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்ற நபருடன் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இவர் மூலமாகவே சஹ்ரான் ISIS தலைவர் அபு பகர் அல் உடன் சஹ்ரான் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார். முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்று அழைக்கப்படும் நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team