ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை..!

Contributors

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் நான்கு இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்
இதுவரையில் 5 நாடுகளில், 54 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 50 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஏனைய நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு இலங்கையர்கள் தீவுக்கு கொண்டு வரப்பட உள்ளனர்

Web Design by Srilanka Muslims Web Team