ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்..!

Contributors

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யாரோ ஒருவர் இருக்கையில் இது முஸ்லிம் சமூகத்தின்மீது வேண்டுமென்று திணிக்கப்பட்ட பழி என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அ.இ.மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷரப் முதுநபீன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

உலகம் முழுவதிலும் இஸ்லாம் போபியா என்ற போர்வையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அதுபோல இலங்கையிலும் இத்தாக்குதலை மையப்படுத்தியதாக ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் முஸ்லிம்கள் மீது குறிவைத்து தாக்கப்படும் பழிவாங்கல் செயற்பாடாகப் பார்க்கிறோம்.

இத்தாக்குதலின் சூத்தரதாரி யார் என்பதை அரசாங்கம் இந்த உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய புரிதல் ஏனைய இனங்களிடையே பிழையாக தோற்றுவிக்கப்பட்டது.

குற்றவாளியாக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி தாக்குதலையிட்டு நன்கு தெரிந்திருந்தும் பதில் பாதுகாப்பு அமைச்சரையும் நியமிக்காமல் அவர் அக்காலப்பகுதியில் சிங்கப்பூர் மற்றும் இந்தியா சென்றிருக்கிறார். எனவே உண்மையான சூத்திரதாரி யார் என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team