ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர் நட்டஈடு கோரி 03 வழக்கு - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர் நட்டஈடு கோரி 03 வழக்கு

Contributors

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணியான மோதித்த ஏக்கநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 03 வழக்குகளை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

இவர் ஷெங்கரில்லா விடுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்றபோது காயமடைந்திருந்தார்.

போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலைத்தடுக்க தவறியதால் தனக்கு உடல் மற்றும் உள அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியே சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 12 தரப்பினரிடம் இந்த நட்டஈட்டை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும் என்றும் வழக்கு தொடுநர் கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதலைத்தடுக்கத் தவறிய ஷெங்கரில்லா நிர்வாகம் 1.5 மில்லியன் டொலரை நட்டஈடாக தனக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் வழக்கு தாக்கல் செய்தார்.

Web Design by Srilanka Muslims Web Team