ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களினால் 27 மனுக்கள் தாக்கல் - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களினால் 27 மனுக்கள் தாக்கல்

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்று தருமாறு கூறி தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அவர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற தவறியாதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team