ஈஸ்டர் தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட, கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது - மல்கம் ரஞ்சித்..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட, கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது – மல்கம் ரஞ்சித்..!

Contributors

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், இன்று (21) தெரிவித்தார்.

இந்த தாக்குதலின் உண்மையை யாராவது அடக்க முயன்றால், அவர்களை மங்கச் செய்து, அவர்களின் சக்தியைக் குறைத்து, மனசாட்சிக்கு ஆதரவாக நிற்கும் சக்தியைக் கொடுக்கும்படி கடவுளிடம் கேட்பதாக குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலின் விவரங்களை மறைத்து கைகளை கழுவ மக்களை  முயன்றாலும் கடவுள் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்றும் பேராயர்  தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிற்று தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அதற்கு காரணமானவர்கள் யார் என்று வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு தழுவிய எதிர்ப்பு நேற்று (21) இடம்பெற்ற அதேநேரத்தில் பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை சேவையில் பங்கேற்றபோதே இவ்விடயங்களை அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team