ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியதை விட, கொரோனா மரணங்களை தடுக்க தவறுவது மோசமான செயல்..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியதை விட, கொரோனா மரணங்களை தடுக்க தவறுவது மோசமான செயல்..!

Contributors

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமை உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தடுக்க நல்லாட்சி அரசாங்கம் தவறியதை விட மோசமான விடயம் என ஜேவிபி  தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவி;த்துள்ளார்.

புலனாய்வு தகவல்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் தாக்குதலை தடுத்துநிறுத்த தவறியமைக்காக நல்லாட்சி அரசாங்கம் எப்படி பொறுப்பேற்கவேண்டுமோ அதனை போன்று கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் இவ்வேளையில் நாட்டை முடக்குமாறு மருத்துவ சுகாதார நிபுணர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணிப்பதற்கான பொறுப்பை இந்த அரசாங்கம் ஏற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தடுக்க தவறியமைக்காக -300 உயிர்களை காப்பாற்ற தவறியமைக்காக மைத்திரி- ரணில் அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் அதேபோல சுகாதார நிபுணர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team