ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு..!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரால் குறித்த பிரதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சிகளின் முக்கியத் தன்மை காரணமாக 22 பிரதிகள் கையளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team