ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை; நிபுணர் குழு அறிக்கை விரைவில் - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை; நிபுணர் குழு அறிக்கை விரைவில்

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் ஆய்வுகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறுதி அறிக்கையினை அடுத்த சில நாட்களில் சமர்ப்பிக்க முடியுமென தாம் நம்புவதாக குழு உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தலைமையிலான குறித்த உப குழு இதுவரையில் மூன்று தடவைகள் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை விரிவாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team