ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் இன்றும்! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் இன்றும்!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நான்காவது நாளாக இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்துக்காக இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் குறித்த அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team