ஈஸ்டர் தாக்குதல் இடம் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன, தாக்குதலுக்கு முன்னின்றவர்களின் தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் இடம் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன, தாக்குதலுக்கு முன்னின்றவர்களின் தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை..!

Contributors

இன்று (02) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் புரேமரத்ன அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

ஈஸ்டர் தாக்குதல் இடம் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த தாக்குதலுக்கு முன்னின்ற முக்கிய பின்னனி செயற்ப்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்காமல் உள்ளது.பல உயிர்கள் பலியான போதும் கத்தோலிக்க மக்கள் மிகவும் பொறுமையாக இது குறித்து நியாயம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று இந்த எதிர்பார்புகள் எங்களிடம் இல்லை. வெளிவந்துள்ள அறிக்கை சில உனமைகளை மறைப்பதாக உள்ளது. 

பயங்கரவாத தாக்குதல் ஒன்று அதிகம் அரசியல் தாக்குதலாக மாறிய ஒரே நிலை இங்கு தான் இடம் பெறுகிறது.

எதிர்வரும் 7 ஆம் திகதி நாங்கள் “கழு இரிதா” (கறுப்பு ஞாயிறு) அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்க கத்தோலிக்க சபை 

தீர்மானிததுள்ளது.இதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை ஓர் பிரஜையாக வழங்குவோம். அரசியல் கட்சி போதங்களுக்கப்பால் இதில் பங்கேற்கிறோம். இந்த கறுப்பு ஞாயிறைத் தடை செய்ய,அரசாங்கம்,எதிர்வரும் ஞாயிறு நாட்டு மக்கள் கறுப்பாடைகளை அனியா வேண்டாம் என வர்த்தமானியை வெளியிட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.அமைதியான முறையில் பங்கெடுப்போம்.இந்த கறுப்பு ஞாயிறு கவனயீர்பு மூலம் நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் ஒர் செய்தியை செல்ல வருகிறோம். இன்று மதிப்புக்குரிய காதினல் அவர்கள் விஷேட அறிவிப்பென்றை விடுவார் என்று எதிர் பார்க்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலின் உன்மையான சூத்திரதாரிகள் அவர்களுடைய சர்வதேச உறவுகள் குறித்து தகவல்கள்

வெளிப்படுத்த வேண்டும்.வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பூரணமற்றது என்பதை அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களே கூறுகின்றனர்.

நியாயமான விசாரணைகள் முன்னெடுக்காவிட்டால் சர்வதேச ஆதரவைக் கோருவதாக அன்மையில் காதினல் அவர்கள் அறிவித்ததன் பின்னனியும் இது தான்.மறைக்கப்படாத உனமைகள் வெளியிடப்பட வேண்டும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது கட்சித் தலைவரைப் பாதுகாக்க முயற்சிக்கிறதே தவிர ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பூரண விசாரணைகளை முன்னெடுக்க முன்வருவதில்லை. 

இன்று சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் முதலாம் பாகம் தான் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் சாட்சியங்களை உள்ளடக்கிய இரண்டாம் பாகம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. முதலாம் பாகத்தை தான் சகலருக்கும் வழங்குகின்றனர்.இதில் சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலங்கள் இல்லை. அவர் என்ன விடயங்களை கூறினார் என்பது தொடர்பாக யாருக்கும் தெரியாது.எனவே தகவல்களை இருட்டடிப்புச் செய்யாமல் உன்மைகளை வெளிப்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team