ஈஸ்டர் தாக்குதல் குறித்து முஸ்லிம்கள் மீது பலிசுமத்தப்படுவது ஒரு நியாயமான செயல் அல்ல..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முஸ்லிம்கள் மீது பலிசுமத்தப்படுவது ஒரு நியாயமான செயல் அல்ல..!

Contributors

கடந்த ஆண்டில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதலை எடுத்து கொண்டால் ஈஸ்டர் தாக்குதலிலே கருவிகலாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தில் இருந்தவர்கள். இதில் ஸஹ்ரான் குழுவினர் முஸ்லீம்களாக இருந்திருக்கின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு இதில் முற்று முழுதாக பங்கு இல்லை என்று பொறுப்பு துரக்க முடியாது. இவர்கள் இயக்கப்பட்டு இருக்கின்றனர். வேறு சிலர் தீய சக்திகள் அவர்களது அரசியல் தேவைகளுக்காக ஓரிரு தேவைக்காக இந்த முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒரு குழுவினை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது. இவ் விடயம் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற காலத்திலும் அம்பலமாகியது இப்பொழுதும் இது அம்பலமாக தொடங்கியிருக்கின்றது அதுமட்டுமன்றி இந்த குறிப்பிட்ட குழுவினர் தொடர்பான ஒரு சமூகத்தில் இருக்கும் பிரஜைகள் தொடர்பாக முஸ்லிம்கள் அதாவது இந்த தாக்குதலில் தொடர்புபடாதவர்கள் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புணர்வோடு நடந்துள்ளனர்.

குறிப்பாக காத்தான்குடி 2015 களில் இந்தக் குழு அடிப்படைவாதிகளாக இருக்கின்றனர் முஸ்லீம் சமூகத்துக்கு உள்ளேயே வேறு சில இஸ்லாமிய அமைப்புகளை தாக்குகின்றனர். வாள் கொண்டு வெட்ட முயற்சிக்கின்றனர் எனவே இவர்களை கைது செய்யுங்கள் விசாரணை செய்யுங்கள் என்று காத்தான்குடி சமூகம் அதேபோன்று ஜம்மியத்துல் உலமா இவற்றை அடையாளம் கண்டு சொல்லி இருக்கின்றது. இவ்வாறான பொறுப்பான ஒரு விடயத்தை முஸ்லிம் சமூகமும் ஜம்இய்யதுல் உலமாவும் செய்துள்ளது. அதோ போன்று இந்தத் தாக்குதல் நடைபெற்ற காலத்தில் சாய்ந்தமருதில் ஒளிந்திருந்த நபர்களை உடனடியாக காட்டிக்கொடுத்து பெரியதொரு அழிவு இடம்பெறாமல் காப்பாற்றி இருக்கின்றனர்.

எனவே இந்த நாட்டை சாதாரணமாக நேசிக்கின்ற நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கின்ற முஸ்லிம் சமூகம் அக்கறையுடன் நடைபெற்றுள்ளனர். எனவே ஒரு சமூகம் எவ்வளவு பொறுப்பு உடன் நடக்க வேண்டுமோ அந்த அளவு பொறுப்புடன் முஸ்லிம் சமூகதினுடய ஏனைய மக்கள் நடந்திருக்கின்றார்கள். இந்தத் தாக்குதலை மையப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தவறு என்றோ அனைவரும் அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் என்றோ விமர்சனம் செய்வது மிகுந்த வலி மிக்கதாக ஏற்றுக்கொள்ளவே முடியாத விடயமாக இருக்கின்றது. 

இந்தக் குழுவினை இயக்கியவர்கள் கண்டறியப்பட்டால் இதனுடைய எல்லா தன்மைகளும் வெளி வரும். எனவே இந்த குழுவினரை இயக்கியவர்களை கண்டறிவது சம்பந்தமாக முரண்பாடுகள் இருக்கின்றது அல்லது ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு இன்று எல்லா கட்சியினரும் இதனை வைத்து அரசியல் செய்வதை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் மாறாக இந்த சூத்திர காரர்கள் கண்டறியப்படா விட்டாலும் பரவாயில்லை சாதாரண அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது பலி சொல்லுகின்ற பலியாக்குகின்ற விடயம் உண்மையிலேயே வெறுக்கத்தக்க வருந்துகின்ற விடயமாக இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team