ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது..!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிக்கின்றார்.
கம்பஹா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த அரசாங்கமே ஆணைக்குழுவை நியமித்தது. எதனையும் மறைக்கவோ, எவரையும் பாதுகாக்கவோ எமக்கு அவசியம் கிடையாது.

குற்றவாளிகள் அனைவருக்கும், தராதரம் பார்க்காது தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

அத்துடன் இந்த விவகாரத்தில் பெசில் ராஜபக்ஸவுக்கு எதிராகவும் சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

அடிப்படைவாதத்தை ஊக்கப்படுத்த வேண்டிய தேவை பெசில் ராஜபக்ஸவுக்கு இருக்கவில்லை. கடந்த தேர்தலின் போதும் எமக்கு அடிப்படைவாதிகள் இருக்கவில்லை.
அடிப்படைவாதத்தை தோற்கடிக்கவே கடந்த தேர்தலின் போது, அவர் செயற்பட்டார். இந்த நிலையில், அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைப்பது குறித்து நாம் எமது எதிர்ப்பினை பலமாக வெளியிடுகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team