ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை!

Contributors

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவியா லேன் அருகில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) காலை வேளையில், கார் ஒன்றில் வந்தவர்கள் இவ்வாறு குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டதில், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்குளி, சாவியா ஒழுங்கையைச் சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை கண்டுபிடிக்க, மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team