ஈஸ்டர் தாக்குதல் மொத்த அறிக்கையில், ஒரு பாகம் தான் வெளிவந்துள்ளது ..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் மொத்த அறிக்கையில், ஒரு பாகம் தான் வெளிவந்துள்ளது ..!

Contributors
author image

Editorial Team

இன்று(05) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்த கருத்துக்கள்.

மிக அன்மைக்காலங்களில் நாளாந்தப் பத்திரிகைகளில் பிரதான தலைப்புச் செய்திகளைப் பார்க்கும் போது அரசாங்கத்தின் பல்வேறு வாக்குறுதிகளுக்கு மீறிய செயற்பாடுகளை அதில் கண்டு கொள்ளலாம். மதிப்பிக்குரிய காதினல் அவர்களின் செய்தி ஈஸ்டர் தாக்குதலின் உன்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் நம்பிக்கையற்ற தனமையை காட்டுவதாக அமைந்துள்ளது. அதே போல் மற்றுமொரு பிரதான செய்தி தான் நாட்டில் காடழிப்பு விடயம் தான். நாட்டின் சட்ட விரோத நடவடிக்கைகளை மக்களுடமிருந்து அரசாங்கம் தான் பாதுகாக்கும் இன்று காடழிப்பை அரசாங்கத்திடமிருந்து மக்கள் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களும் இந்த அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு நேர் மாற றமான நடவடிக்கைகள் ஆகும். சௌபாக்கியத்தின் தொலை நோக்கில் ஒன்பதாவது  இலக்காக சுக்றாடல் பாதுகாப்பு குறித்து பிரஸ்தாபித்துள்ளது. இன்று நாட்டின் சகல இடங்களிலும் காடழிப்பு அரசாங்க ஆதரவுடன் இடம் பெற்று வருகிறது. உலக மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ள 30 இடங்கள் இலங்கையில் உள்ளன. அவற்றிலும் இந்தக் காடழிப்பும்,சட்டவிரோத மணல் அகழ்வும் இடம் பெறுகிறது.

இந்தக் காடழிப்கால் நகர் புறங்களில் குறிப்பாக கொழும்பில் வாய்வு மண்டலத்தில் ஒக்ட்சிஜன் குறைந்துள்ளது.எங்களை அறியாமலயே சுவாசம் ரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட வன்னமுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மொத்த அறிக்கையில் ஒரு பாகம் தான் வெளிவந்துள்ளது. இந்த அரசாங்கம் எதிர்க் கட்சியில் இருந்த போது என்ன கூறி ஆட்சிக்கு வந்தனர்? தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் காதினலை சந்தித்த போது ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களுக்குள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்து தண்டிப்பதாகக் கூறினார்.இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்து விட்டது. புதிதாக என்ன செய்தார்? கடந்த ஆட்சியில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆணைக்குழு அறிக்கையைத் தான் இன்று. வெளியிட்டுள்ளனர்.

காதினல் எழுப்பும் உன்மைகள் தான் எங்களுக்கும் வேண்டும். சஹ்ரானின் பின்னனியில் இருந்தவர்கள் யார்? தாக்குதலின் உன்மை தேவையுடையவர்கள் யார்? நிதி உதவி வழங்கியவரகள் யார்? உள்ளிட்ட அடிப்படை முக்கிய விடயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உன்மைகளைக் கண்டு கொள்ளும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை.ஈஸ்டர் தாக்குதலை வைத்து மீண்டும் அரசியல் செய்வதற்கே முனைகின்றனர்.அதிகார இருப்பை பொருனபானமை மக்களிடம் பலப்படுத்தவே முனைகின்றனர். ஈஸ்டர் தாக்குதல் குறித்து நீதியான தீர்வுகள் வெளிவராது என்ற தோற்றப்பாட்டைத் தான் காதினல் கூற வருகிறார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளிலும் இந்த அரசாங்கம் பொய்ல் என்பதை தான் நிரூபித்துள்ளனர்.

ஜெனீவா விவகாரத்தையும் கையலாளத் தெரியாத அரசாங்கம் காதினல் ஈஸ்டர் பிரச்சிணையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றால் எவ்வாறு கையாளப் போகிறார்கள். இராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய விடயங்களை செய்யாமல் விட்டதன் விளைவைத் தான் இந்த அரசாங்கம் சந்தித்து வருகிறது.காதினலையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் ஏமாற்றி, பான் கீ மூனையும் ஏமாற்றி ஏனைய பல நாடுகளையும் ஏமாற்றி இராஜந்திர ரீதியாகவும் பொய்ல் ஆகி ஏமாற்று அரசாங்கத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team